செய்திகள்

சிறார்களுக்கு எதிரான பாலியல் புகார் - சிலி நாட்டில் இரு பிஷப்புகளை பதவிநீக்கம் செய்து போப் உத்தரவு

Published On 2018-10-13 12:16 GMT   |   Update On 2018-10-13 12:16 GMT
சிலி நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் புகாரில் சிக்கிய இரு பிஷப்புகளின் பதவியை பறித்து போப் பிரான்சிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார். #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked
வாட்டிகன் சிட்டி:

கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பல பிஷப்புகளுக்கு எதிராக சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்துவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவ்வகையில், கேரள மாநிலத்தில் ஒரு கன்னியாஸ்திரியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பிராங்கோ முல்லக்கல் என்பவரை ஜலந்தர் பிஷப் பதவியில்  இருந்து நீக்கம் செய்து வாட்டிகன் அரண்மனை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதேபோல், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் உள்ள சில பிஷப்களும், சிறார்-சிறுமிகளிடம் தகாத வகையில் பாலுறவு வைத்துகொண்டதாக புகார்கள் எழும்பின.

இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போப் பிரான்சிஸ் பெர்னான்டோ கரோடிமா(88) என்பவரை கடந்த மாதம் பிஷப் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மற்ற சம்பவங்கள் தொடர்பால தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் சிலி நாட்டில் உள்ள லா செரெனா நகர ஆர்ச்பிஷப் பிரான்சிஸ்க்கோ ஜோஸ் கோக்ஸ் ஹுனீயூஸ் மற்றும் இக்குவிகியூ நகர ஆர்ச்பிஷப் மார்க்கோ அன்ட்டோனியோ பெர்னான்டஸ் ஆகியோரை போப் பதவி நீக்கம் செய்துள்ளதாக வாட்டிகன் அரண்மனை இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

வாட்டிகன் அரண்மனையின் சட்டங்களின்படி, போப்பின் இந்த முடிவு உறுதியானது, இறுதியானது. இதை எதிர்த்து யாரும் முறையீடு செய்ய முடியாது எனவும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PopeFrancis  #Chileanbishops #bishopsdefrocked
Tags:    

Similar News