செய்திகள்

உலக தலைவர்கள் தரவரிசையில் இந்திய பிரதமர் மோடிக்கு 3-வது இடம்

Published On 2018-01-12 07:44 GMT   |   Update On 2018-01-12 07:44 GMT
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் தரவரிசையில் 3-வது இடம் கிடைத்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
புதுடெல்லி:

சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் இணைந்து எடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மோடி 8 புள்ளிகள் பெற்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் பிடித்துள்ளார்.



பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபர் புதின், சவூதி அரசர் சல்மான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் முறையே 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றுள்ளனர். இந்த ஆய்வு 50 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடையே நடத்தப்பட்டது.

Tags:    

Similar News