ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #iPhoneXS #iPhoneXSMax
உலகில் முதல் முறையாக 7என்.எம். ரக சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் Xs, Xs மேக்ஸ் அறிமுகம்
பதிவு: செப்டம்பர் 12, 2018 23:42
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய மாடல்கள் முந்தைய ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் Xs மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.
ஐபோன் Xs மேக்ஸ் மாடலில் இதுவரை வெளியானதில் பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். கிட் மூலம் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கேம் விரைவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>இத்துடன் புதிய ஐபோன் Xs சீரிஸ் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.