பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மீண்டும் நியமித்துள்ளார். #BJP #Advani #EthicsPanel
பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க மக்களவை ஒழுங்குமுறை குழு உள்ளது. நன்னடத்தை விதிமுறைகளை மீறும் எம்.பி.க்கள் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் இக்குழுவிற்கு உள்ளது.
இக்குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், இந்த பதவியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை மீண்டும் இன்று நியமித்துள்ளார்.