உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இரவு 5:15 மணிக்கு தொடங்கிய காலிறுதி போட்டியில் இங்கிலாந்து - அர்ஜெண்டினா அணிகள் மோதின.
இப்போட்டியின் 21-வது நிமிட ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் லூகாஸ் விலா முதல் கோல் அடித்தார். அதன்பின் 29-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மேதியாஸ் பரேடஸ் கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற போல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியது.
இங்கிலாந்து அணியின் டேவிட் காண்டோன் 29-வது நிமிடத்தில் ஒரு கோல்கள் அடித்தார். தொடர்ந்து 34-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஜூவான் கிலார்டி ஒரு கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்க முயற்சித்தனர். இங்கிலாந்தின் ஆடம் டிக்ஸன் ஆட்டதின் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு தொடங்கிய காலிறுதி போட்டியில் ஜெர்மனி - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் 12-வது நிமிடம் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் முதல் கோல் அடித்தார். அதன்பின் 21-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மிர்கோ ப்ரூய்ஜ்சர் கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜோர்ன் கெல்லர்மேன் கோல் அடித்தார். தொடர்ந்து 34-வது நிமிடத்தில் ஜெர்மனியின் பிளோரியன் புக்சும், 41-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கான்ஸ்டடினும் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர்.
இதனால் ஜெர்மனி 3-2 என முன்னிலை பெற்றது. இறுதியில் கடைசி நிமிட ஆட்டத்தில் நெதர்லந்தின் மிர்கோ ப்ரூய்ஜ்சர் கோல் அடித்தார். அதன்பின் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 3-3 என சமனில் முடிந்தது.
இது நாக்-அவுட் சுற்று என்பதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் ஜெர்மனி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.