செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 791 கன அடியாக அதிகரிப்பு

Published On 2019-06-08 06:05 GMT   |   Update On 2019-06-08 06:05 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 328 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 791 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 328 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 791 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 45.74 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 45.69 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News