செய்திகள்

மதுரை கலெக்டர் மாற்றம் ஏன்? - அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

Published On 2019-06-05 08:35 GMT   |   Update On 2019-06-05 08:35 GMT
அனுபவமும், திறமையும் நிறைந்தவர் தேவை என்பதால் தான் மாவட்ட கலெக்டர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த நாகராஜன் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வருவாய் அலுவலர் நிர்வாக பொறுப்புகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மாற்றம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுபவமும், திறமையும் நிறைந்தவர் தேவை என்பதால் தான் மாவட்ட கலெக்டர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சத்துணவு ஊழியர்கள் பணி நியமன விவகாரத்தால் தான் கலெக்டர் மாற்றப்பட்டார் என்பது முற்றிலும் தவறானது.

அ.தி.மு.க. ஆட்சியில் கடை நிலை ஊழியர்கள் முதல் கலெக்டர் வரை சுதந்திரமாக செயல்படுகிறார்கள். 7 பேர் விடுதலை விவகாரம் சர்வதேச அரசியல் பின்னணியை கொண்டுள்ளது. மக்கள் செல்வாக்கு வந்து விட்டதாக ஸ்டாலின் நினைத்துக் கொள்கிறார். ஆனால் தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News