செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்- முத்தரசன்

Published On 2019-05-30 05:36 GMT   |   Update On 2019-05-30 05:36 GMT
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்கு வாழ்த்துக்கள். பா.ஜனதா மதமோதல்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மதசார்பற்ற கொள்கைக்கு எதிரானது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும். கடந்த டிசம்பரில் இருந்து மே மாதம் வரை மாத வாரியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை 13 டி.எம்.சி. குறைத்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை வழங்க வேண்டிய தண்ணீரை 13 டி.எம்.சி. குறைத்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை வழங்க காவிரி ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால் கொடுக்காமல் விட்டுப்போன தண்ணீரை பற்றி வாரியம் எதுவும் கூறவில்லை. தமிழக அரசும் அதைப்பற்றி கேட்கவில்லை.

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தமிழகத்துக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.

தமிழகம் முழுவதும் குளம், குட்டைகளில் தண்ணீரின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி பல இடங்களில் தண்ணீர் எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். சென்னையில் ஒரு டேங்கர் தண்ணீர் ரூ.1500-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வாரிய டேங்கர்களில் வரும் தண்ணீர் தனியார் டேங்கர் லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News