செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Published On 2019-05-24 06:18 GMT   |   Update On 2019-05-24 07:11 GMT
பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தோற்கடித்தார்.
திருவள்ளூர்:

தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

திருவள்ளூர் (தனி) தொகுதியில் 19,46,242, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,95,121 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய ஜெயக்குமார் 6,79,685 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் 3,55,938 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி செல்வி 57,840, அமமுக வேட்பாளர் பொன்ராஜ் 29,345, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் லோகநாதன் 64,380 வாக்குகள் பெற்றுள்ளனர். 
Tags:    

Similar News