செய்திகள்

விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு - 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு

Published On 2019-05-15 06:00 GMT   |   Update On 2019-05-15 06:00 GMT
விடைத்தாள் திருத்துவதில் முறைகேடாக மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளதையடுத்து 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:

ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினார்கள்.

இதில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில் அசல் மதிப்பெண்களுக்கு பதிலாக முறைகேடாக தேர்ச்சிக்குரிய 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்ததை தேர்வுத்துறை கண்டுபிடித்தது. அதன்பிறகு விடைத்தாள்கள் முழுமையாக மீண்டும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்திருந்தது.

இதன் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் 112 பேர் என 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

Similar News