செய்திகள்
கைது செய்யப்பட்ட செல்வம்

துப்பாக்கி சூடு நடத்தி ரூ.1½ கோடி பறிமுதல் - தலைமறைவாக இருந்த அ.ம.மு.க. நிர்வாகி கைது

Published On 2019-05-06 10:34 GMT   |   Update On 2019-05-06 10:34 GMT
ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தி ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அ.ம.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார். #AMMK
ஆண்டிப்பட்டி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தில் தீவிரசோதனை நடத்தி வந்தனர். கடந்த மாதம் 16-ந் தேதி ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்றபோது அவர்களை அ.ம.மு.க.வினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கதவு, ஜன்னல்களை உடைத்து பணத்தை அள்ளிக்கொண்டு ஓடினர்.

நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் அ.ம.மு.க. அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த ரூ.1.48 கோடியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பழனி, சுமன்ராஜ், பிரகாஷ்ராஜ், மது ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அ.ம.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் செல்வத்தை (வயது35) தீவிரமாக தேடி வந்தனர். போடியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். #AMMK
Tags:    

Similar News