செய்திகள்

கோவை ஈஷா யோகா மையத்தில் 3டி ஒளி-ஒலி காட்சியில் ஆதியோகி திவ்ய தரிசனம்

Published On 2019-05-03 09:14 GMT   |   Update On 2019-05-03 09:14 GMT
கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் மே 4-ந்தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுகிழமைகள், அமாவாசை, பவுர்ணமி தினங்கள் மற்றும் விசே‌ஷ நாட்களில் ஆதியோகி 3டி ஒளி, ஒலிகாட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. #AdiyogiDivyaDarshan
சென்னை:

ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

யோக கலாச்சாரத்தில் சிவனை கடவுளாக பார்ப்பது இல்லை. அவரை ஒரு யோகியாகவே பார்க்கிறோம். அதிலும் அவர் உலகில் தோன்றிய முதல்யோகி என்பதால் அவரை ஆதி யோகி என அழைக்கிறோம்.

மனிதன் தனது அனைத்து கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வளர முடியும் என்பதை உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் அவர். தன்னை நாடி வந்த சப்தரிஷிகளுக்கு (7 ரிஷிகளுக்கு) 112 யோக வழிமுறைகளை ஆதியோகி சொல்லி கொடுத்தார்.

அந்த வழிமுறைகளை சப்தரிஷிகள் உலகம் முழுவதும் கொண்டு சென்றனர். இது உலகில் ஒரு மாபெரும் ஆன்மீக புரட்சி நிகழ்வதற்கு அடித்தளமாக அமைந்தது.

இதற்கு முழு முதற் காரணமாக இருந்த ஆதி யோகி சிவனுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, கோவை ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடியில் ஆதியோகியை சத்குரு பிரதிஷ்டை செய்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ஆதி யோகியை தரிசிப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், ஆதியோகியின் வாழ்க்கையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக “ஆதியோகி திவ்ய தரிசனம்” என்னும் 3டி ஒளி-ஒலி காட்சியை கடந்த மகா சிவராத்திரி அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இதையடுத்து, வரும் மே 4-ந்தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுகிழமைகள், அமாவாசை, பவுர்ணமி தினங்கள் மற்றும் விசே‌ஷ நாட்களில் ஆதியோகி 3டி ஒளி, ஒலிகாட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி இரவு 8 மணிக்குதொடங்கி சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். ஆதியோகி திவ்ய தரிசனத்தை பார்வையிடுவதற்கு எவ்வித முன்பதிவும் தேவையில்லை. கட்டணமும் இல்லை.

அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் வருகை தரும்பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. #AdiyogiDivyaDarshan
Tags:    

Similar News