செய்திகள்

அஜித்குமார் பிறந்த நாள்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Published On 2019-05-01 09:33 GMT   |   Update On 2019-05-01 09:33 GMT
நடிகர் அஜித்குமார் பிறந்த நாளையொட்டி அவருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #Ajithkumar #OPanneerSelvam
சென்னை:

நடிகர் அஜித்குமார் பிறந்த நாளையொட்டி அவருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Ajithkumar #OPanneerSelvam

Tags:    

Similar News