செய்திகள்
பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை படத்தில் காணலாம்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2019-05-01 07:09 GMT   |   Update On 2019-05-01 07:09 GMT
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #TrichyAirport
திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

அடிக்கடி மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதும், அதனை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வழியாக விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

இதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரை சேர்ந்த முகமது கியாஸ், புதுக்கோட்டையை சேர்ந்த சாபு பரலி ஆகியோரிடம் இருந்து 957 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும்.

இவர்கள் 3 பேரும் குருவிகளாக செயல்பட்டு கமி‌ஷனுக்காக தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து தங்க செயின்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #TrichyAirport
Tags:    

Similar News