செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12ம் தேதி வரை நீட்டிப்பு

Published On 2019-04-05 07:06 GMT   |   Update On 2019-04-05 07:06 GMT
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்னப்பதாரர்களுக்கான கால அவகாசம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #TETExamDateExtended
சென்னை:

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15 முதல்  இன்று வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.

8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது.



இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் பள்ளியில் எடுத்த மதிப்பெண் மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டது. ஆனால் இனி பணி நியமனத்திற்கு என்று தனியாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை கொண்டு பணியில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளது.  இணையதளம்  சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, இன்றுடன் முடிவடைய இருந்த ஆன்லைன் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #TETExamDateExtended

 

















 
Tags:    

Similar News