செய்திகள்

தெற்கு வங்க கடலில் காற்றழுத்த பகுதி - 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Published On 2019-01-25 07:44 GMT   |   Update On 2019-01-25 07:45 GMT
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலம் முடிந்த பின்பு வறண்ட வானிலையே காணப்படுகிறது. பகலில் வெயிலும், இரவில் கடும் பனியும் நிலவுகிறது.

இந்த நிலையில் பூமத்திய ரேகை பகுதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

மேலும் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இது மன்னார் வளைகுடா, தமிழ்நாடு, உள் கர்நாடகா வரை பரவியுள்து.

இதன் காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 2-வது வாரம் வரை பனி நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rain

Tags:    

Similar News