செய்திகள்

மோடியின் கூட்டணியில் யாரும் இல்லை - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2019-01-16 09:33 GMT   |   Update On 2019-01-16 09:33 GMT
மோடியின் கூட்டணியில் யாரும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் குழுக்கள் அமைப்பதற்காக தமிழக பொறுப்பாளர்களை சந்திக்க டெல்லி செல்கிறேன். இறுதி முடிவை ராகுல்காந்தி அறிவிப்பார்.

எந்த மாநிலத்திலும் மோடியின் அலை இல்லை. குறிப்பாக தமிழகத்தில் 5 சதவீதம் கூட மோடிக்கு ஆதரவு இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு இருப்பது தெரிகிறது.

அகிலேஷ் யாதவ், மாயவாதி கூட்டணி பா.ஜனததாவுக்கு எதிரான கூட்டணி. மதம், ஜாதி, மொழி ஆகியவற்றை வைத்து மக்களை பிரித்து ஆளும் வழக்கம் உடையவர் மோடி. அப்படித்தான் சபரிமலை, முத்தலாக் போன்ற வி‌ஷயங்களில் தலையிட்டுள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்து இருக்கிறது என்று மோடி கூறி இருக்கிறார். அந்த கதவுக்குள் நுழைய யாரும் இல்லை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியே வருகிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது.

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அவர் வைத்துள்ள போலீஸ் துறையை வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும். கொடநாடு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அல்லது பணியில் இருக்கும் நீதிபதியை வைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News