செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, சிறுகிழங்கு விலை உயர்வு

Published On 2019-01-12 08:07 GMT   |   Update On 2019-01-12 08:07 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது. இதில் சிறுகிழங்கு, தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் விலை சற்று அதிகமாக உள்ளது. #Pongal #KoyambeduMarket
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது.

ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 400 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

வழக்கமாக கிடைக்கும் கத்தரிக்காய், தக்காளி, முட்டை கோஸ், உருளைக்கிழங்கு வகைகளுடன் பொங்கல் பண்டிகைக்காக கிடைக்கும் சிறுகிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காரகருணை, பிடிகருணை என பல்வேறு வகை கிழங்குகள், மஞ்சள் குலைகள், வாழைத்தார்கள், கரும்புகள் லாரி லாரியாக மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

இதில் சிறுகிழங்கு, தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் விலை சற்று அதிகமாக உள்ளது.

கோயம்பேட்டில் ஒரு கிலோ சிறுகிழங்கு ரூ.50-க்கு விற்கப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் ரு.55-க்கும் அயனாவரம் கடைகளில் ரூ.80-க்கும் சிறுகிழங்கு விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு கோயம்பேட்டில் ரூ.25-க்கு கிடைக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை, அயனாவரத்தில் ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.30-க்கும், கத்தரிக்காய்- தக்காளி கிலோ ரூ.50-க்கும், மாங்காய் ரூ.130-க்கும், பிடிகருணை- கார கருணை ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு கிடைக்கிறது.

பொங்கல் வரை காய்கறி விலை அதிகமாக இருக்கும் என்றும் அதன்பிறகு விலை குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். #Pongal #KoyambeduMarket
Tags:    

Similar News