செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியாக சரிவு

Published On 2019-01-08 04:14 GMT   |   Update On 2019-01-08 04:14 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பலமடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று 116 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 119 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம்போல் 11ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பலமடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 81.2 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் ஒரு அடி சரிந்து 80.24 அடியாக குறைந்தது. இதே நிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
Tags:    

Similar News