செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகள் மீதான நம்பிக்கையை அரசியல்வாதிகள் சிதைக்கக் கூடாது: தமிழிசை கண்டனம்

Published On 2018-12-30 08:29 GMT   |   Update On 2018-12-30 08:29 GMT
அரசியல்வாதிகள் குறைகூறி அரசு ஆஸ்பத்திரிகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக் கூடாது என டாக்டர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனைகள் செயல்படும் விதத்தை திமுக தலைவர் முகஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் விமர்சித்தனர்.

இதை கண்டித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஏழை, எளிய மக்கள் தங்கள் உடல் உபாதைகளுக்காக செல்லும் ஒரே புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான். அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நிகழ்ந்துவிட்ட ஒரு தவறுக்காக ஒட்டுமொத்தமாக அரசு ஆஸ்பத்திரிகளை அரசியல்வாதிகள் குறை சொல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடகூடாது.

அரசு ஆஸ்பத்திரிகளை குறை சொல்லும் அரசியல்வாதிகள் அரசு ஆஸ்பத்திரி வாசலைக் கூட மிதிப்பது கிடையாது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News