செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம்-தங்கம் பறிமுதல்

Published On 2018-12-17 05:23 GMT   |   Update On 2018-12-17 05:23 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #TrichyAirport #GoldSmuggling

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது உசேன் என்பவரின் கைப்பையை சோதனை செய்த போது அதில் இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்க நாட்டுப் பணம் இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதே போல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது தஞ்சையை சேர்ந்த சாந்தி என்பவர் விதிமுறைகளை மீறி ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை அணிந்து வந்திருந்தார். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முகமது உசேன், சாந்தியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #TrichyAirport #GoldSmuggling

Tags:    

Similar News