செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் -டோனி நிகழ்த்திய 2 உலக சாதனைகள்

Published On 2019-06-06 09:11 GMT   |   Update On 2019-06-06 09:11 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் டோனி நிகழ்த்திய 2 சாதனைகள் என்ன என்பதை பார்ப்போம்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.

போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய அணி, ரோகித் ஷர்மாவின் அபார சதத்தால்  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி, நேற்றைய ஆட்டத்தில் 2 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவை பின்வருமாறு:



கீப்பராக அதிக சர்வதேச இன்னிங்சில் விளையாடியவர்கள்:

டோனி -600*
பவுச்சர்-596
சங்ககரா-499

உலக கோப்பையில் அதிக டிஸ்மிஸஸ் செய்த விக்கெட் கீப்பர்கள்:

சங்ககரா-54
கில்கிரிஸ்ட்-52
டோனி-33*
Tags:    

Similar News