செய்திகள்

கண்டத்தில் இருந்து தப்பிய விஜய் சங்கர்: மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஒன்றுமில்லை எனத் தகவல்

Published On 2019-05-26 09:47 GMT   |   Update On 2019-05-26 11:04 GMT
கலீல் அகமது வீசிய பந்து விஜய் சங்கர் கையை பலமாக தாக்கியது. இதில் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இந்த போட்டிக்கான வலைப்பயிற்சியில் விஜய் சங்கர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் வலது கையை (Forearm) பலமாக தாக்கியது.

இதனால் அவர் வலியால் துடித்தார். அவர் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ? என்ற அச்சம் நிலவியது. இதனால் உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.



இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடவில்லை. 28-ந்தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News