செய்திகள்

உலகக்கோப்பையில் விளையாடும் 9 அணி கேப்டன்கள் அடித்த சதத்தைவிட இவருடைய சதம் கூடுதல்

Published On 2019-05-24 09:33 GMT   |   Update On 2019-05-24 09:33 GMT
உலகக்கோப்பையில் விளையாடும் 9 அணி கேப்டன்கள் அடித்துள்ள சதங்களைவிட இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூடுதலாக ஒரு சதம் அடித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்றபின் 19 சதங்கள் விளாசியுள்ளார். மற்ற 9 அணி கேப்டன்களின் ஒட்டுமொத்தமாக 18 சதங்களே அடித்துள்ளனர்.

உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தொடரில் அதிக சதங்களை எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News