செய்திகள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்த ‘யுனிவர்ஸ் பாஸ்’ கெய்ல்

Published On 2019-05-16 11:03 GMT   |   Update On 2019-05-16 11:03 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதாகும் இவர் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடியுள்ள இவருக்கு, இங்கிலாந்தில் நடைபெற்ற இருக்கும் உலகக்கோப்பை ஐந்தாவது தொடராகும்.

பொதுவாக கிறிஸ் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்கள் எடுக்க வேகமாக ஓடமாட்டார். மேலும் அவரால் தொடர்ந்து பீல்டிங் செய்ய இயலாது.



கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் கெய்ல் ஜிம்மை தவிர்த்து யோகா மற்றும் மசாஜ் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்.

ஜம்மை தவிர்ப்பதாலும், போட்டிகளுக்கு இடையில் அதிக அளவில் ஓய்வு எடுப்பதாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்று கெய்ல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News