செய்திகள்

இரட்டை ஆதாயம் தரும் பதவி: தெண்டுல்கர், லஷ்மண் 14-ந்தேதி ஆஜராகிறார்கள்

Published On 2019-05-07 10:01 GMT   |   Update On 2019-05-07 10:01 GMT
இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை வகித்து வருவதாக எழுந்த புகாரில், நேரில் ஆஜராகும்படி சச்சின் தெண்டுல்கர், லஷ்மண் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #BCCI #Sachin
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஆலோசனை கமிட்டியில் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர், லஷ்மண், கங்குலி ஆகியோர் உள்ளனர்.

இந்தநிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணி ஆலோசகராக தெண்டுல்கரும் ஐதராபாத் அணி ஆலோசகராக லஷ்மணனும் உள்ளனர். இதனால் இருவரும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்கும்படி கிரிக்கெட் வாரிய மத்தியஸ்தரும் நெறிமுறைகள் அலுவலருமான டி.கே. ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இருவரும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர்.



இந்நிலையில் தெண்டுல்கர் மற்றும் லஷ்மண் ஆகியோருக்கு வருகிற 14-ந்தேதி டெல்லியில் கிரிக்கெட் வாரிய மத்தியஸ்தர் முன்பு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News