செய்திகள்

365 ரன்கள் குவித்து அசுர சாதனைப் படைத்த வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி

Published On 2019-05-05 15:45 GMT   |   Update On 2019-05-05 16:28 GMT
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியின் ஷாய் ஹோப் - ஜான் கேம்ப்பெல் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 365 ரன்கள் குவித்து அசுர சாதனைப் படைத்துள்ளது.
அயர்லாந்து, வங்காள தேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

முதல் போட்டியில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல் - ஷாய் ஹோப் ஆகியோர்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அயர்லாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 35-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஷாய் ஹோப் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் விளையாடிய ஜான் கேம்ப்பெல் 36-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி என்ற பெருமையை பெற்றது. சதம் அடித்த பின்னர் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 47.2 ஓவரில் 365 ரன்கள் குவித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஜான் கேம்ப்பெல் 137 பந்தில் 179 ரன்கள் குவித்தார்.



இதன்மூலம் அதிக ரன்கள் குவித்தது ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர். இதற்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த பகர் சமான் - இமான்-உல்-ஹக் ஜோடி 304 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.

ஷாய் ஹோப் 47-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் 152 பந்தில் 170 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Tags:    

Similar News