செய்திகள்

20 ஓவர் போட்டி தரவரிசையில் 80 அணிகளுக்கு இடம்

Published On 2019-05-04 03:42 GMT   |   Update On 2019-05-04 03:42 GMT
20 ஓவர் கிரிக்கெட்டை பல நாடுகளுக்கு பிரபலப்படுத்துவதற்கு வசதியாக தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை ஐ.சி.சி. சேர்த்துள்ளது. #ICC
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணிகளின் வருடாந்திர தரவரிசை பட்டியலை ‘அப்டேட்’ செய்து நேற்று வெளியிட்டது. 20 ஓவர் கிரிக்கெட்டை மேலும் பல நாடுகளுக்கு பிரபலப்படுத்துவதற்கு வசதியாக இந்த தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை ஐ.சி.சி. சேர்த்துள்ளது. பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. தென்ஆப்பிரிக்கா (262 புள்ளி) 2-வது இடத்திலும், இங்கிலாந்து 3-வது இடத்திலும் (261 புள்ளி), ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும் (261 புள்ளி), இந்தியா (260 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளன. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக நேபாளம் 11-வது இடத்தில் இருக்கிறது.

சிங்கப்பூர் (23-வது இடம்), டென்மார்க் (24), அமெரிக்கா (31), ஸ்பெயின் (41), ஜப்பான் (53), அர்ஜென்டினா (56), பிரேசில் (69) ஆகிய அணிகளும் தரவரிசையில் அங்கம் வகிக்கிறது.

ஐ.சி.சி. உறுப்பு நாடுகள் அதாவது குட்டி அணிகள் விளையாடும் 20 ஓவர் போட்டிக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்குவது என்று ஐ.சி.சி. கடந்த ஆண்டு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #ICC
Tags:    

Similar News