செய்திகள்

குல்தீப் யாதவை நீக்கியது ஏன்?: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை பயிற்சியாளர் கல்லிஸ் விளக்கம்

Published On 2019-05-02 15:05 GMT   |   Update On 2019-05-02 15:05 GMT
ஈடன் கார்டன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இல்லை. அதனால் குல்தீப் யாதவ் இடம் பெறவில்லை என கல்லீஸ் தெரிவித்துள்ளார். #IPL2019 #KKR #kuldeepYadav
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் திகழ்ந்து வருகிறார். ரிஸ்ட் ஸ்பின்னராக இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் குல்தீப் யாதவ் பந்து வீச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி மூன்று போட்டிகளில் அவர் களம் இறக்கப்படவில்லை. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அவருக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமோ? என்று கருகிறார்கள்.

ஆனால், டி20 போட்டி என்பது வேறு. 50 ஓவர்கள் உலகக்கோப்பை என்பது வேறு என்று கல்லிஸ் தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவ் குறித்து கல்லிஸ் கூறுகையில் ‘‘இந்த சீசனுக்கான ஈடன் கார்டன் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் கடினமாக இருந்தது. குல்தீப் யாதவுக்கு இந்த வருடம் மிகவும் கடினமானது. ஆனால், இதில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 50 ஓவர் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



அணியில் இருந்து நீக்கியது அவரை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது சற்று மாறுபட்ட பார்மட். சரியான பேலன்ஸ் அணியை உருவாக்க வேண்டிய நிலை இருந்ததால், துரதிருஷ்டவசமாக அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. அவரது சரியான லைன் லெந்தை பெறுவதற்காக வலையில் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். ஆகவே, உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பார் என்பது உறுதி’’ என்றார்.
Tags:    

Similar News