செய்திகள்
தஸ்கின் அகமது

அயர்லாந்து முத்தரப்பு தொடர்: வங்காளதேச அணியில் பர்கத் ரிஜா, தஸ்கின் அகமது சேர்ப்பு

Published On 2019-04-28 11:46 GMT   |   Update On 2019-04-28 11:46 GMT
அயர்லாந்தில் நடைபெற இருக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணியில் பர்கத் ரிஜா, தஸ்கின் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன் நடைபெறும் இந்த தொடர் நடக்கிறது. உலகக்கோப்பைக்கான வங்காள தேச அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ருபெல் ஹொசைன், முஸ்டாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இருவரும் தற்போது காயத்தில் உள்ளனர். இதனால் தஸ்கின் அகமது, பர்கத் ரிஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ருபெல் ஹொசைன் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். முஸ்டாபிஜூர் ரஹ்மான் கணுக்கால் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையவில்லை.



அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மே 5-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. உலகக்கோப்பையில் வங்காளதேசம் மே 30-ந்தேதி தொடக்க போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News