செய்திகள்

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இரண்டு வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர்

Published On 2019-04-26 13:03 GMT   |   Update On 2019-04-26 13:03 GMT
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக், வினேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். #AsianWrestlingChampionships
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் வடகொரியாவைச் சேர்ந்த கிராப்ளரை 9-6 என வீழ்த்தி பதக்கம் வென்றார்.

5 கிலோ எடைபிரிவில் வினேஷ் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற குயியன்யு பங்க்-ஐ 8-1 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.


வினேஷ்

இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்றுள்ளது.
Tags:    

Similar News