செய்திகள்

ஸ்மித், வார்னர் இல்லாதது இளம் வீரர்களுக்கு ஆசிரியர் இல்லாதது போன்றது- ஹசில்வுட்

Published On 2019-02-19 11:58 GMT   |   Update On 2019-02-19 11:58 GMT
ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாமல் இளம் வீரர்கள் ஆசிரியர் இல்லாத மாணவர்கள் போன்று தவித்து வருகிறார்கள் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். அவர்களை வழி நடத்த மூத்த வீரர்களான ஸ்மித், வார்னர் இல்லாமல் போய்விட்டனர்.

ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர்கள் ஆசிரியர் இல்லாத மாணவர்கள் போன்று தவிக்கிறார்கள் என்ற ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘முதல் முறையாக முதல் 6 முன்னணி பேட்ஸ்மேன்கள் சீனியர் வீரர்கள் இல்லாமல் களம் இறங்கும்போது, பயிற்சியாளரிடம் மட்டுமே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.



ஒவ்வொரு முறையும் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது சதம் அடிக்கும் நிலையில் இருப்பார். அதனால்  வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்படாது. ஆறு புதுமுகங்கள் இருக்கும்போது இரண்டு முன்னணி வீரர்கள் அணியில் இருந்து கற்றுக்கொடுப்பது அவசியம்.

அனைத்து விஷயங்களையும் பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியாது. சீனியர் வீரர்களுடன் ஆடுகளத்தில் இணைந்து விளையாடும்போது, அவர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News