செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2019-02-10 08:47 GMT   |   Update On 2019-02-10 08:47 GMT
ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
Tags:    

Similar News