செய்திகள்

ரிச்சர்ட்ஸ், இம்ரானை நினைவுபடுத்தும் விராட் கோலி - ரவிசாஸ்திரி புகழாரம்

Published On 2019-02-06 07:51 GMT   |   Update On 2019-02-06 07:51 GMT
ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை விராட் கோலி நினைவுப்படுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli #RaviShastri
வெல்லிங்டன்:

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஜொலிக்கிறார்.

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார். சிறந்த வீரர், டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐ.சி.சி. விருதுக்கு தேர்வான உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட்கோலி பெற்றார்.

இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை அவர் நினைவுப்படுத்துகிறார் என்று பாராட்டியுள்ளார்.

நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். விராட்கோலி ஒரு அடையாளம். முற்றிலும் மாறுபட்ட வீரர். அவரது தலைமை வேண்டும். அவரைப் போல் உழைக்க யாரும் இல்லை.

பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் இல்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

விராட் கோலி பல வழிகளில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை நினைவுப்படுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார்.

பேட்டிங்கில் அவர் வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ரிச்சர்ட்சை நினைவுப்படுத்துகிறார். நான் பார்த்ததில் கோலி பலமடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அவர் மேலும் மேலும் நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறார். உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் வென்றதை குறிப்பிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விராட்கோலி கடந்த ஆண்டு 13 டெஸ்டில் 1322 ரன் எடுத்தார். சராசரி 55.08 ஆகும். 5 செஞ்சுரியும் அடித்து இருந்தார். 14 ஒருநாள் போட்டியில் 6 சதத்துடன் 1,202 ரன் எடுத்தார். சராசரி 133.55 ஆகும்.

ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணிக்கு அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #RaviShastri
Tags:    

Similar News