செய்திகள்

கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: 30 நாளில் மூன்று ‘எல் கிளாசிகோ’ போட்டி

Published On 2019-02-03 13:55 GMT   |   Update On 2019-02-03 13:55 GMT
பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டி 30 நாட்களுக்குள் மூன்று முறை நடைபெற இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.# Barcelona #ElClasico
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் பார்சிலோனா, ரியல் மாட்ரிட். இரு அணிகளும் பரம எதிரிகள் போன்றுதான் கால்பந்து மைதானத்தில் மோதும். கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன் பட்டத்திற்கு இரு அணிகளுக்கு இடையே கடும் பனிப்போர் நடக்கும்.

பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ‘எல் கிளாசிகோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எல் கிளாசிகோ போட்டியைக் காண உலகம் முழுவதும் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ‘கோபா டெல் ரே’ தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் லெக் வருகிற 6-ந்தேதி பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடக்கிறது. 2-வது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடக்கிறது.

அதன்பின் மார்ச் 3-ந்தேதி லா லிகா தொடரின் லீக் ஆட்டத்தில் மோதுகிறது. 30 நாட்களுக்குள் மூன்று முறை எல் கிளாசிகோ போட்டி நடக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News