செய்திகள்

‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்

Published On 2019-01-18 14:13 GMT   |   Update On 2019-01-18 14:13 GMT
புவனேஸ்வர் குமார் VS ஆரோன் பிஞ்ச் இடையிலான மோதலில் புவனேஸ்வர் குமார் மூன்று முறையும் ஆரோன் பிஞ்ச்-ஐ வீழ்த்தி அசத்தினார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. பொதுவாக ஒரு தொடர் தொடங்குவதற்குமுன் இரண்டு பேரை ஒப்பிட்டு, அதில் ஜெயிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு கிளம்பும்.

அப்படித்தான் ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்தை ஆரோன் பிஞ்ச் எதிர்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. புவனேஸ்வர் குமார் பந்து வீச்சை சமாளித்து விட்டால், அதன்பின் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் புவேனஸ்வர் குமார் புதிய பந்தில் தனது ஸ்விங் திறமையால் ஆரோன் பிஞ்ச்-ஐ நடுங்க வைத்துவிட்டார்.

சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார்.

இன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரின் ஸ்விங் பந்தை சந்திக்க திணறிய ஆரோன் பிஞ்ச், க்ரீஸை விட்டு அதிக அளவு முன்னாள் வந்து தடுத்தாடினார். இரண்டு முறை ஸ்லிப் திசையில் பந்து எட்ஜ் ஆகியது. ஆனால் தப்பிவிட்டார்.



அதன்பின் புவனேஸ்வர் குமாரின் முதல் ஸ்பெல்லின் கடைசி பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்கினார். இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டானார். டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தியும் பலனில்லை. இதனால் 24 பந்துகளை சந்தித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தனார்.

இந்தத் தொடரில் ஆரோன் பிஞ்ச் புவனேஸ்வர் குமார் வீசியதில் 37 பந்துகளை சந்தித்தார். இதில் 30 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. 7 பந்தில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 முறையும் அவுட்டாகியுள்ளார்.
Tags:    

Similar News