செய்திகள்

பெண்கள் பிக் பாஷ் லீக்: கிரேஸ் ஹாரிஸ் அதிவேக சதம் அடித்து சாதனை

Published On 2018-12-20 09:40 GMT   |   Update On 2018-12-20 09:40 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடரில் கிரேஸ் ஹாரிஸ் அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். #WBBL
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களம் இறங்கியது. விக்கெட் கீப்பரான பெத் மூனே - கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். கிரேஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரியும், சிக்சருமான விளாசினார். இதனால் பிரிஸ்பேன் ஹீட் 10.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இரு அணிகளின் ஸ்கோர் சமநிலையில் இருந்தது. அப்போது கிரேஸ் 95 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் சிக்ஸ் விளாசினார். இதனால் 42 பந்தில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடரில் அதிகவேகமாக சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்தார்.



இதற்கு முன் அஸ்லெக் கார்ட்னெர் 47 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது கிரேஸ் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் உலகளவில் 2-வது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். 2010-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை தியேந்த்ரா டொட்டின் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 38 பந்தில் சதம் அடித்ததே டி20-யில் அதிவேக சதமாக உள்ளது.
Tags:    

Similar News