செய்திகள்

மன்னிப்பு கேட்காவிடில் அவதூறு வழக்கு- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் தலைவர் மிரட்டல்

Published On 2018-10-30 13:10 GMT   |   Update On 2018-10-30 13:10 GMT
பதவிக்காலத்தில் அதிக பணத்தை செலவழித்ததாக ஆடிட்டிங் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிடில் அவதூறு வழக்கு பாயும் என நஜய் சேதி குறிப்பிட்டுள்ளார். #PCB #NajamSethi
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. இவரது காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தார். இந்தியாவிற்கு வந்து பிசிசிஐ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருநாடுகளுக்கு இடையிலான தொடரை இலங்கையில் நடத்த முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் இந்தியா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்காததால் வேறு வழியின்றி இந்தியா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஐசிசி-யில் முறையிட்டார்.

இந்நிலையில்தான் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாகிஸ்தானில் அமைந்தது. இதனால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எஹ்சன் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆடிட்டிங் குழு, சம்பளம் தொடர்பாக சுமார் 7 கோடி ரூபாய் செலவழித்துவிட்டார் நஜம் சேதி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஜம் சேதி, மன்னிப்பு கேட்காவிடில் கிரிக்கெட் வாரியம் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை குறிவைக்கிறார்கள். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. என்னுடைய வக்கீல் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருக்கு என்னை அவமானம் செய்ய முயன்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’’ என்றார்.
Tags:    

Similar News