செய்திகள்

பாரா பேட்மிண்டன் வீரர் ராஜ்குமார் அர்ஜூனா விருதை போராடி பெற்றார்

Published On 2018-09-19 11:36 GMT   |   Update On 2018-09-19 11:55 GMT
பஞ்சாப்பை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரர் ராஜ்குமார், இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு அர்ஜுனா விருதை விளையாட்டு துறை மந்திரியிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார். #Arjuna Award #RajKumar #RajyavardhanSinghRathore
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பாரா பேட்மிண்டன் வீரரான இவர் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாமியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

அந்த ஆண்டு விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கிய அர்ஜுனா விருது பெற்றோருக்கான பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ராஜ்குமாருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.



இந்நிலையில், டெல்லியில் மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் இன்று ராஜ்குமாரை வரவழைத்து அர்ஜூனா விருதை வழங்கினார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அர்ஜூனா விருது பெற்றது குறித்து ராஜ்குமார் கூறுகையில், நான் இந்த விருதை பெறுவதற்கு மிக்க உதவியாக இருந்த எனது பயிற்சியாளருக்கு இந்த எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Arjuna Award #RajKumar #RajyavardhanSinghRathore
Tags:    

Similar News