செய்திகள்

பாகிஸ்தான் சவாலை இந்தியா சமாளிக்குமா? - இன்று பலப்பரீட்சை

Published On 2018-09-19 06:29 GMT   |   Update On 2018-09-19 06:29 GMT
பாகிஸ்தான் அணி நீண்ட காலமாக துபாயில் விளையாடி சூழ்நிலை அறிந்து வைத்திருப்பதால் ஆசிய கோப்பையின் இன்றயை போட்டியில் பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #AsiaCup2018 #INDvPAK
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

‘ஏ’ பிரிவில் ஹாங் காங்தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றதால் வெளியேறியது. இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

ஆனாலும் இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது.

ஹாங் காங்குக்கு எதிராக இந்தியா போராடியே வெற்றி பெற்றதால் அணியில் சில மாற்றம் இருக்கும். லோகேஷ் ராகுல், பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள்.


இந்தியா பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது மிகவும் அவசியமானது. மேலும் பாகிஸ்தான் அணி துபாயில் நீண்ட காலமாக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அங்குள்ள சூழ்நிலை, ஆடுகளத்தை நன்று அறிந்து இருப்பார்கள். எனவே பாகிஸ்தான் சவாலை இந்தியா சமாளிக்க போராட வேண்டியது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரோகித் சர்மா, டோனி, நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம்.

சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பஹார் ஜமான், சோயிப் மாலிக், முகமது அமீர், ஜீனைத்கான், ஹசன்அலி, ஆசிப் அலி போன்ற வீரர்கள் உள்ளனர். அந்த அணி பந்துவீச்சில் பலம் வாய்ந்து காணப்படுகிறது.  #AsiaCup2018 #INDvPAK
Tags:    

Similar News