செய்திகள்

இந்தியாவிற்கு சாதகமான வகையில் அட்டவணை மாற்றியமைப்பு- பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கம்

Published On 2018-09-18 15:17 GMT   |   Update On 2018-09-18 15:17 GMT
இந்தியாவிற்கு சாதகமான வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க கால ஆட்டவணையில் இந்தியா சில போட்டிகளில் அபு தாபியில் விளையாடும் வகையில் இருந்தது.

அதன்பின் இந்தியாவின் அனைத்து போட்டிகளிலும் துபாயில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டடு. இது இந்தியாவிற்கு சாதகமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



இதுகுறித்து சர்பிராஸ் கூறுகையில் ‘‘போட்டி அட்டவணையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியா ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தோற்றாலும் கூட, தொடர்ந்து துபாயில் விளையாட முடியும். அபுதாபிக்கும் துபாயிக்கும் டிராவல் செய்யும் பிரச்சனை உள்ளது. 90 நிமிடங்கள் பயணம் செய்து, பின்னர் விளையாட வேண்டும். அதன்பின் ஒருநாள் இடைவெளியில் அடுத்த போட்டியில் களம் இறங்க வேண்டும்.

இது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏன் இதுபோன்று நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கையில் எடுக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News