தொடர்புக்கு: 8754422764

ராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

பதிவு: மே 23, 2019 12:19

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

பதிவு: மே 23, 2019 12:03

முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்

ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

பதிவு: மே 23, 2019 11:59

பாஜக எம்.பி.க்கள் 25-ந்தேதி டெல்லிக்கு வர உத்தரவு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு: மே 23, 2019 11:52

கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி

கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

அப்டேட்: மே 23, 2019 11:20
பதிவு: மே 23, 2019 11:18

டெல்லிக்கு வருமாறு 20 ஆயிரம் பா.ஜனதா தொண்டர்களுக்கு அழைப்பு

டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

பதிவு: மே 23, 2019 11:07

சிக்கிமில் மாநில கட்சி ஆட்சி- அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி

சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பதிவு: மே 23, 2019 11:00

அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி

ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.

அப்டேட்: மே 23, 2019 10:49
பதிவு: மே 23, 2019 10:41

ஒடிசாவில் நவீன்பட்நாயக் அமோக வெற்றி- மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.

பதிவு: மே 23, 2019 10:36

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

பதிவு: மே 23, 2019 10:19

மேஜிக் நம்பரை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை- ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அப்டேட்: மே 23, 2019 13:35
பதிவு: மே 23, 2019 09:49

பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பின்னடைவில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 09:40

தமிழகத்தில் திமுக கூட்டணி முந்துகிறது- முன்னிலை பெற்ற முக்கிய வேட்பாளர்கள்

பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.

பதிவு: மே 23, 2019 09:28

724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்

நடிகை ஹேமமாலினி, ஜெயபிரதா உள்ளிட்ட 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று (வியாழக்கிழமை) தெரிய வரும்.

பதிவு: மே 23, 2019 09:12

அமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவு- மோடி, அமித் ஷா முன்னிலை

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.

பதிவு: மே 23, 2019 08:55

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

அப்டேட்: மே 23, 2019 08:49
பதிவு: மே 23, 2019 08:36

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா கருத்து

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 08:05

மண்டியாவில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவார்: அனிதா குமாரசாமி

மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி கூறியுள்ளார்.

பதிவு: மே 23, 2019 07:51

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

பதிவு: மே 23, 2019 06:04

பிரதமருக்கு எதிராக அவதூறு - ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு

பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

பதிவு: மே 23, 2019 04:29

வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகத்துக்கு, தோல்வி பயமே காரணம் - அமித்ஷா

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

பதிவு: மே 23, 2019 03:46