தொடர்புக்கு: 8754422764

பாஜகவின் மகத்தான வெற்றி - அமித் ஷா, மோடிக்கு அத்வானி வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றிமுகம் காட்டிவரும் நிலையில் இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கு மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:51

சட்டசபை தேர்தல்களில் வெற்றி - நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒடிசா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களை பிடித்த பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை மோடி வாழ்த்தியுள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:25

பேட்ஸ்மேன் சதம் அடித்தபோதிலும், அணி தோற்ற உணர்வுதான் தேர்தல் முடிவு: சசி தரூர்

பேட்ஸ்மேன் சதம் அடித்தபோதிலும், அணி தோற்றால் என்ன உணர்வு இருக்குமோ?, அதேபோல்தான் காங்கிரஸ் தோல்வி உள்ளது என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:01

ஜனாதிபதியை 26-ம் தேதி சந்திக்கிறார் மோடி- அடுத்த வாரம் பதவியேற்பு விழா

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மீண்டும் அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:00

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றி உறுதியானது

கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிமுகம் காட்டி வருகிறார்.

பதிவு: மே 23, 2019 15:47

மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்- பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை

மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பதிவு: மே 23, 2019 15:40

வாரணாசியில் மோடி, காந்திநகரில் அமித் ஷா அதிக வாக்குகளில் முன்னிலை

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பதிவு: மே 23, 2019 15:17

மீண்டும் ஒருமுறை இந்தியா வென்று விட்டது: பிரதமர் மோடி டுவிட்

அனைத்தையும் உள்ளடக்கிய வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

பதிவு: மே 23, 2019 15:15

அமேதியில் ராகுலை முந்துகிறார் ஸ்மிருதி இரானி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 15:06

இது மக்களின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்- ஜெகன் மோகன் ரெட்டி உறுதி

ஆந்திர மாநிலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த வெற்றியானது மக்களின் வெற்றி என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

பதிவு: மே 23, 2019 14:49

மோடி அலையில் இருந்து பஞ்சாப் தப்பியது: காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை

பாஜக கூட்டணி வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

பதிவு: மே 23, 2019 14:47

அபார மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 14:14

ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் முன்னிலை- காங்கிரஸ் சரிந்தது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 பாராளுமன்றத் தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்தங்கியுள்ளது.

பதிவு: மே 23, 2019 14:00

கோவா முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது

சமீபத்தில் காலமான கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

பதிவு: மே 23, 2019 13:53

மேற்கு வங்காளத்தில் பாஜக விஸ்வரூபம் - 2 தொகுதியில் இருந்து 18 தொகுதிக்கு முன்னேற்றம்

மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 13:14

பாராளுமன்ற தேர்தல்- கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

அப்டேட்: மே 23, 2019 14:37
பதிவு: மே 23, 2019 13:04

‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாநில கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அத்துடன் கிங் மேக்கராக ஆகும் அவர்களின் ஆசை நிராசையாக மாறி போனது.

அப்டேட்: மே 23, 2019 13:37
பதிவு: மே 23, 2019 13:02

அடுத்தடுத்து ஆட்சி - பா.ஜனதா புதிய சாதனை

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.

பதிவு: மே 23, 2019 12:57

உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு: மே 23, 2019 12:39

டெல்லியில் 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றுகிறது- ஷீலாதீட்சித் பின்னடைவு

டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

பதிவு: மே 23, 2019 12:38

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி முகம்

பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.

பதிவு: மே 23, 2019 12:23