செய்திகள்

மக்களவை இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம்

Published On 2019-06-11 07:13 GMT   |   Update On 2019-06-11 07:13 GMT
17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: 

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதீத பெரும்பான்மையுடன், பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இதேபோல் பிரதமர் மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்றார். 

இதனிடையே, 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 17-ந் தேதி தொடங்க உள்ளது. முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 19–ந் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். 20–ந் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 26–ந் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. 



இந்நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து வீரேந்திர குமார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
Tags:    

Similar News