செய்திகள்

வாரணாசியை போல் கேரளாவை பார்ப்பதாக மோடி கூறியது வேடிக்கையாக உள்ளது- ராகுல்காந்தி

Published On 2019-06-09 09:45 GMT   |   Update On 2019-06-09 09:45 GMT
வாரணாசியை போல் கேரளாவும் தன் மனதுக்கு நெருக்கமான இடம் என மோடி கூறியது வேடிக்கையாக உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு: 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். ஆனால் கேரளாவின் வயநாடு  தொகுதியில், 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி 3 நாட்கள் கேரளாவில் ‘ரோடு ஷோ’ நடத்தி வருகிறார். கடைசி நாளான இன்று கோழிக்கோடு பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், " வாரணாசியை போல் கேரளாவும் தன் மனதுக்கு நெருக்கமான இடம் என மோடி கூறியது வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களையும், பிற மாநிலங்களையும் மோடி வெவ்வேறு விதமாக கையாண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

வயநாடு தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும், அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.  

Tags:    

Similar News