செய்திகள்

மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் மேல்-சபை எம்.பி.யாகிறார்

Published On 2019-06-08 10:20 GMT   |   Update On 2019-06-08 10:20 GMT
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மேல்-சபை எம்.பி.யாகிறார்.
புதுடெல்லி:

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளில் ஒன்று லோக் ஜனசக்தி ஆகும். இந்த கட்சி பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய மந்திரியாகி உள்ளார். அவர் உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை கேபினட் அமைச்சராக இருக்கிறார்.

ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மந்திரியாக உள்ள அவர் 6 மாதத்தில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்தநிலையில் ராம் விலாஸ்பஸ்வான் மேல்-சபை எம்.பி ஆகிறார். பீகார் மாநிலத்தில் இருந்து அவர் தேர்வு செய்யப்படுகிறார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மேல்- சபை எம்.பி. பதவி காலியாகிறது. அந்த இடத்தில் ராம்விலாஸ் பஸ்வான் தேர்வாக உள்ளார்.
Tags:    

Similar News