செய்திகள்

போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து தீபிடித்தது -கோவா விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

Published On 2019-06-08 10:18 GMT   |   Update On 2019-06-08 11:36 GMT
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘மிக்’ ரக போர் விமானம் இன்று புறப்பட்டு சென்றபோது கூடுதல் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து தீபிடித்ததால் கோவா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பனாஜி:

கோவா தலைநகர் பனாஜியில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய கடற்படைக்கு  சொந்தமான ‘மிக்-29K ’ ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.

ஓடுபாதையில் நகர்ந்து வானில் உயரக்கிளம்பியபோது அந்த விமானத்தின் இறக்கை பகுதியில் உபரி எரிபொருளை சேமித்து வைக்கும் கூடுதல் பெட்ரோல் டேங்க் திடீரென்று கீழே விழுந்தது.

விழுந்த வேகத்தில் ஓடுபாதையை ஒட்டியுள்ள புல்வெளி பகுதியில் தீபிடித்ததால் கோவா விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் பயங்கரமான புகை மண்டலம் சூழ்ந்தது.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். இதனால், விமான நிலையம் ஒருமணி நேரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர், வழக்கம்போல் விமானச் சேவைகள் தொடங்கின.
Tags:    

Similar News