செய்திகள்

பொய்கள், நச்சுக்கருத்து, வெறுப்புணர்வில் அமைந்தது மோடியின் பிரசாரம் - ராகுல் காந்தி தாக்கு

Published On 2019-06-08 09:15 GMT   |   Update On 2019-06-08 09:15 GMT
பிரதமர் மோடியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் பொய்கள், நச்சுக்கருத்து, வெறுப்புணர்வில் அமைந்திருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

ஆனால் கேரளாவின் வயநாடு  தொகுதியில், 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி நேற்று முதல் 3 நாட்கள் கேரளாவில் ‘ரோடு ஷோ’ நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்கு கூடியிருந்த மக்கள் 'காவலாளி ஒரு திருடன்’ என முழங்கினர். அந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:



பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 'காவலாளி ஒரு திருடன்’ என்ற முழக்கத்தை மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். நரேந்திர மோடி வெறுப்பு அரசியல் மூலம் நாட்டினை பிளவுபடுத்தி வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி தனது அன்பால் அத்தகைய வெறுப்பு அரசியலை கட்டுப்படுத்தும்.

வயநாட்டின் மக்களுக்காக காங்கிரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என கூறியுள்ளார். 
Tags:    

Similar News