செய்திகள்

ஆளில்லா விமானம் மூலம் அனுப்பப்படும் ரத்த மாதிரிகள்

Published On 2019-06-08 06:40 GMT   |   Update On 2019-06-08 06:40 GMT
உத்தரகாண்டில் ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.
டெஹ்ரி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தின் தொலைதூர பகுதியான நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி சோதனை நடத்தப்பட்டது.  

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் இன்றி ஆளில்லா விமானம் மூலம் 18 நிமிடங்களில் நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரி வந்து சேர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த இரு மருத்துவமனைகளுக்கு இடையிலான தூரம் 30 கிலோமீட்டர் ஆகும். 



இது விரிவுபடுத்தப்பட்டால் கிராமப்பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் பயன்பெறுவார்கள் என மருத்துவர்கள் கூறினர். ஆளில்லா விமானத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய எதிர்காலத்தில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News