செய்திகள்

காங்கிரசின் நீண்ட கால ஆட்சி சாதனையை முறியடிப்பார் பிரதமர் மோடி - ராம் மாதவ்

Published On 2019-06-08 03:14 GMT   |   Update On 2019-06-08 03:14 GMT
இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ் என்ற சாதனையை பிரதமர் மோடி முறியடிப்பார் என பாஜக தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
அகர்தலா:

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 43 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியை பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் அளித்துள்ள ஒப்புதலாகவே  கருதப்பட்டது.

இதற்கிடையே, திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், மாநில தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க. சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 27 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்து வந்தது. தற்போதுவரை இதுவே மிக நீண்ட ஆட்சியாக உள்ளது. 



ஆனால் இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடிப்பார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுக்கு 6 கோடி புதிய ஓட்டுகள் கிடைத்துள்ளது.

இந்தியாவின் சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடும் 2047ம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் ஆட்சி தொடரும்.

பா.ஜ.க. என்றால் தேசப்பற்று. தேசப்பற்று என்றால் பா.ஜ.க.வையே குறிக்கும். 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

அதில் மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு விடும், வேலை வாய்ப்பின்மை பிரச்சனைக்கு முடிவு காணப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News